உள்ளபடி!! உள்ளத்தில் உள்ளதை படி!!


31/08/2026 - திங்கள்

1) திருச்சபை எது ? 
என்ற கேள்விக்கு  பல பதில்களை நாம் சொல்லலாம். 

அதில், முக்கியமான ஒன்று *மே..மே.. என கத்தும் ஆடுகளின் திரள் கூட்டம்..* என்று நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.🐑🐑🐏

- அந்த சபைகளில் எப்படி நாம் பயணிப்பது,
- எவ்வாறெல்லாம் பாதை உள்ளது 

என்ற ஒரு முறைமையை 
யோசிக்க வைத்துள்ளனர் இந்த உலக நாடுகள் அறிந்த இரு போதகர்களின் வார்த்தைகள்.
...
சங்கீதம் 23 ஐ நாம் அனைவரும் அறிந்து மனனம் செய்த ஒரு பாடல்.. அதுபோலவே, *எரே 23 / எசே 34* ஐ நாம் அறிவதும் அவசியம் ஆகும்.

ஏனெனில் அதிலே தான், தாம் ரத்தம் சிந்தி மீட்ட 
அவரின் திருச்சபையாம் நானுமே/நீங்களுமே.,  எவ்வாறு மந்தையை(சபையை) சீர்குலைக்கக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார் தேவன். 

......... 

பிற ஆடுகளை ஒடுக்குகிறவர்களாய் இருக்கிறோமா என்று நிச்சயம் TEST பண்ணிக்க வேண்டும்.

" நீங்கள் நல்ல மேய்ச்சலை மேய்ந்து, உங்கள் மேய்ச்சல்களில் மீதியானதை உங்கள் கால்களால் மிதிக்கலாமா? தெளிந்த தண்ணீரைக் குடித்து, மீதியாயிருக்கிறதை உங்கள் கால்களால் குழப்பிப்போடலாமா? (வேதம்)
_________________________
நீங்கள் நல்ல மேய்ச்சல் நிலத்தில் மேய்வது போதாதென்றா, எஞ்சிய மேய்ச்சல் நிலங்களைக் காலால் மிதிக்கிறீர்கள்? நல்ல நீரைக் குடித்துவிட்டு எஞ்சிய நீரைக்காலால் கலக்குகிறீர்கள்!  (விவி) 
 *எசேக்கியேல் 34* :18" 

#1
* நமக்கு கிடைத்த ஊழிய வாய்ப்பு.. பெயர்.. உரிமை கொண்டு..
மற்ற விசுவாசிகளை சபை உறவின் மீதே வெறுப்பு அடைய செய்கிறோமா.. எனவும்.

* நமது சுயபெலன், பதவி, பட்டம், புகழ், திறமை, பணம், ஆடம்பரம்.
* ஜாதி, நிற, ஐஸ்வர்ய பலம், கார், பங்களா.

போன்ற எந்த ஒரு செயலும்..
கேவலமான ஒரு செயலே ஆகும்.

பிரதான மேய்ப்பர்,
பெரிய மேய்ப்பர்..
நல்ல மேய்ப்பர்..
இயேசு கிறிஸ்து 
நியாயம் சரி கட்டுவார்.

இன்றே, நம்மை நாமே நிதானித்து அறிந்தால்.. நியாயம் தீர்க்கப்படோம் என அப். பவுல் சொல்கிறார்!

______
#2 சபை பொறுப்பாளர்களாம் மேய்ப்பர்/ஆயர்..

DENOMINATIONS வித்தியாசம் இன்றி, 
தங்கள் விருப்பு / வெறுப்பு கொண்டு, எளிய ஆடுகளை குணப்படுத்தாமல், அரவணைக்காமல் சுயநலமாக ஆட்டை அடித்து துன்புறுத்துகின்றனரே!

அவர்களுக்கான நிலை எவ்ளோ பரிதாபம்!


-----------
இறுதியாக,
மனிதர் மனவடிவு ஆக்கினாலும்..
 *கர்த்தர் என் மேய்ப்பர், நான் தாழ்ச்சியடையேன் (தளர்ந்து போகேன்). சங் 23:1* என கர்த்தரை நோக்கி நாம் ஆலயம் நாடுவோம்..
சபைகளின் ஐக்கியம் கர்த்தரின் எதிர்பார்ப்பு! (எபி 10:25)

நிச்சயம் நன்மையும் கிருபையும் யாவரையும் தொடரும்!

கர்த்தர் நல்லவர்!

நன்றி!

- மிதுன் தன குமார். செ
 31/08/2026 | 1

Post a Comment

0 Comments